2005- ம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தின் கீழ்ப் பகுதியில் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடபடாத ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிகொள்ளலாம் என்றும் மேலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புழக்கத்துக்கு விடப்போவதில்லை எனவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
தற்பொழுது அந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி மேலும் 9 மாதம் கால அவகாசம் அளித்துள்ளது.எனவே வரும் 2015 ஜனவரி 1-ம் தேதி வரை மாற்றிக்கொள்ள முடியும்.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் : பழைய ரூபாய்கள் செல்லாதவையே, ஆனால் பெரும்பாலான பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுவிட்டன. எனவே மீதம் உள்ள நோட்டுகளை மேலும் மாற்றிக்கொள்ள 9 மாதம் கால அவகாசம் அளிக்கபடுகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை எந்த வித அசவுகரியமு மின்றி மாற்றிக் கொள்ள வசதி செய்து தரப்படும். இதற்கு எந்த சேவை கட்டணமும் இல்லை என்றும் அறிவித்தார்.