Indira assassin”s son joins Bahujan Samaj Party
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளார். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அவருடைய வீட்டில் அவருடைய பாதுகாவலர்களான பியாந்த் சிங் (வயது 33) மற்றும் சத்வந்த்சிங் (26) என்பவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது மற்ற பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குலில் பீந்த் சிங் சம்பவ இடத்திலேயே பலியானான். சத்வந்த் சிங்குக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்திரா கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா. சிரோன்மணி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியில் சேர்ந்தார். இவர், கடந்த 2007 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிண்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தநிலையில் சரப்ஜித் சிங் கல்சா, நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பிரகாஷ் சிங் ஜண்டாலி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 16வது லோக்சபா தேர்தலில் அக்கட்சி சார்பாக அவருக்கு பதேகர் சாகிப் தனித்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Indira assassin”s son joins Bahujan Samaj Party
Sarabjit Singh Khalsa, son of Beant Singh, one of the two assassins of Prime Minister Indira Gandhi, joined the Bahujan Samaj Party on Sunday. Sarabjit, who had unsuccessfully contested Lok Sabha elections in 2007 from Bathinda on the SAD (Amritsar) ticket, joined the BSP in the presence of its Punjab unit president Parkash Singh Jandali and other leaders. The BSP is likely to field Sarabjit as its candidate for upcoming Lok Sabha polls from Fatehgarh Sahib Reserve Constituency, party sources said. When contacted, Sarabjit told PTI it is up to the BSP leadership to decide on the matter. Asked what prompted him to join the BSP, he said it is a party of Dalit community. Sarabjit said he is fed up with “hardliner groups” like SAD (A) and had decided to join the BSP. Sarabjit (34), a resident of Mohali, had also contested the Punjab Assembly polls from Bhadaur in 2007 on the SAD (A) ticket but was humbled. Beant Singh and Satwant Singh, who were both bodyguards of Indira Gandhi, assassinated her on October 31, 1984. Beant Singh was immediately killed by the security guards.