மாயமாகி போன மலேசிய விமான தேடுதல் வேட்டை: உலக நாடுகளின் கடுமையான போராட்டம்

ஆஸ்திரேலியா :- சிட்னி

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகரமான  பெய்ஜிங்குக்கு 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமாகி போனது .

Flight

கடந்த 8 நாட்களுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து , மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, வியட்நாம்  உட்பட 26 நாடுகள் தேடிவருகின்றன. எனினும் எந்த வித தகவலும் நேற்றுவரை கிடைக்கபெறவில்லை

காணாமல் போன் விமானத்தை  இந்திய பெருங்கடலின் 2 பகுதிகளில் தேடப்பட்டு வருகிறது . முதல் பகுதி வடக்கு தாய்லாந்து முதல்  கஜகஸ்தான் எல்லை வரையிலும்,  2-வது பகுதி இந்தோனேஷியாவில் இருந்து தெற்கு இந்திய பெருங்கடல் வரை தேடப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய ராடாரில்  இந்திய பெருங்கடல் பகுதியில்  இரண்டு பொருடகள் காணப்படுவதாகவும், இந்நிலையில்  மாயமான மலேசிய விமானம்  உடைந்த பாகங்களாக இருக்கக்கூடும் என ஆஸ்திரேலியா அறிவித்தது. அது பற்றி ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தமக்கு கிடைக்கப்பட்ட தகவலின்படி இந்து மகாசமுத்திரத்தில் சிதறி கிடக்கும் பொருட்கள் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கக்கூடும்  என கூறினார்.

இது குறித்து மேலும் கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு:

* ரேடாரில் இந்திய கடலில் உள்ள பொருள் ஆஸ்திரேலியாவின் ரேடாரில் 16 ந்தேதி தெரிகிறது.

* பொருள் முழுவதும் மூழ்கி உள்ளது இந்த பொருள் கடலில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இருக்கலாம் எனகூறப்படுகிறது.

* ஒரு பொருளின் நீளம் 78 அடியும்(24 மீட்டர்) மற்றொன்று 15 அடையும் (5 மீட்டர்) நீளமும் உள்ளது.

* பொருட்கள் காண்ப்படும் பகுதியில்  அமெரிக்கா, ஆஸ்திரேலிய,,நியூசிலாந்து, மலேசியா மற்றும் இங்கிலாந்தின்  விமானம் மற்றும் கடற்படை கப்பல்கள் அனுப்பிவைக்கபட்டு உள்ளன.

* சீனா தேடுதல் வேட்டைக்காக மேலும் 3 தேடுதல் கப்பல்கலை அனுப்பி உள்ளது.

* தேடுதல் வேட்டையில் 29 விமானங்கள்,21 கப்பல்கள்,6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு உள்ளன.

* இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்பட்ட பொருட்களைத் தேடும் முயற்சியில் இது வரை வெற்றி கிடைக்கவில்லை.
.
தேடப்படும் பொருள் கப்பலின் உதிரிபாகங்களாக இருப்பின் விமானம் தேடுதல் வேட்டை முயற்சியில் கடும் சாவால்கள் உள்ளன,அவைகள் வருமாறு:-

* அந்தபகுதியில் வீசும்  கடுமையான காற்றும், மழையும் இன்று இந்த முயற்சியைப் பாதித்தன.

* உலகின் மோசமான கடல் பகுதிகளில் ஒன்று.இது அதிகமான நீரோட்டங்கள் நிறைந்தபகுதி

* இந்த கடல் பகுதி மற்ற கடல்பகுதிகளை விட  இருமடங்கு ஆழமான பகுதி

* விமானம் விபத்துள்ளாகி இந்திய பெருங்கடலில் விழுந்து இருந்தால் விமானத்தை தேடுவது எனபது கடினமான காரியம். இந்திய பெருங்கடலின் மொத்த பரப்பளவு 73,556,000 சதூர கிலோ மீட்டர் ஆகும்.

* இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் 3.5 கிலோ மீட்டர்.அட்லாண்டிக் கடலை விட இது ஆழமானது

* இந்திய பெருங்கடலில் சில சிதறிய தீவுகள் உள்ளன கோகோஸ் தீவுகள்,கிரிஸ்துமஸ் தீவுகள், என உள்ளன. இங்கு நீர் விரிவடைந்து காணப்படுகிறது.

* ஏர் பிரான்ஸ் விமானம் ஏப்447 ஜூன் 2009 ல் ரியோ டி பிரேசில் இருந்து ம் பாரிசுக்கு செலூம் பாதியில் நொறுங்கி கடலில் விழுந்தது அதன் கருப்பு பெட்டியை மீட்கவே 2 ஆண்டுகள் பிடித்தது எனபது குறிப்பிடதக்கது ,

Related posts