இலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்

கொழும்பு: இலங்கையில் உள்ளூர் ஆட்சி தேர்தலில் எதிர்கட்சிக்கு சாதகமான பத்திரிக்கை செய்திகளை குறைக்கவே இந்த தாக்குதல் நடத்த பட்டதாக முக்கிய தமிழ் கட்சி குற்றம் சாட்டியது.

இலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்

உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல் நடத்தியதின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை எற்படுத்தி உள்ளதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) கூறியுள்ளது.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையை இந்த தாக்குதலில் பின்னணியில் இலங்கை ராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என கூறப்பட்டது.

குறிப்பாக உதயன் உரிமையாளர் திரு ஈஸ்வரபாதம் சரவணபவன் எதிர்க்கட்சி  MP என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தமது 5 பத்திரிக்கை தொழிலாளிகள் கொல்லபட்டுள்ளனர், அவர்களில் கொலையில் சந்தேகத்தில் உள்ள எவரையும் விசாரிக்க வில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

“இது போருக்கு பிந்தைய ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்தரத்தின்  மீதான நேரடி தாக்குதல்.” என ஒரு உள்ளூர் ஊடக உரிமைகள் குழு, கூறியுள்ளது.

சமீப காலங்களில் இலங்கையில் சுமார் 17 பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்ல பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts