Drinking Water scarcity in Tamil Nadu. District Collectors with Higher officials meeting organized to tackle the situation.
சென்னை, மே. 2 – பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் கடும் வறட்சியால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிதண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக விநியோகிக்கப்படும் குடிதண்ணீரும் மாதம் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் குடிதண்ணீருக்கு பொது மக்கள் மத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வறட்சி மற்றும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்டாட்சியர்களுடன் தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகின்றது.
இதில் பொதுப் பணித்துறை செயலாளர் சாய்குமார், நிதி துறை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையாளர் டி.எஸ்.ஸ்ரீதர், வருவாய் துறை செயலாளர் ககன் தீப் சிங்பேடி, நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கடந்த இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் வேலூர், தீருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், சேலம், கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் மாவட்டாட்சியர்கள் பங்கேற்றனர். நேற்று மே தின விடுமுறை என்பதால் இன்று மற்றும் நாளை மீதமுள்ள எட்டு மாவட்ட மாவட்டாட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்கள்.
தமிழ்நாட்டில் வற்ட்சி நிலைமையை கருத்தில் கொண்டு ரூ.681 கோடி செலவில் குடிநீர் தொகுப்பு அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாவட்ட வாரியாக மாவட்டாட்சியர்களிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஒவ்வொரு மாவட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.