10 Indians killed in a Road Accident at Dubai
துபாய் : துபாயில் நடைபெற்ற ஓர் கோரமான சாலை விபத்தில், இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரழந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் துபாயில், இந்திய தொழிலாளர்கள் ஏராளமான பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த, தொழிலாளர்கள் 27 பேர் , கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு, சிறிய பேருந்தில் பயணம் செய்தனர்.
அப்பொழுது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த உழவு வாகனம் (டிராக்டர்) மீது, கட்டுமான தொழிலாளர்கள் சென்ற பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில், தொழிலாளர்கள் 15 பேர், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில்10 பேர் இந்தியர்கள் குறிப்பாக எல்லோரும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இறந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அங்கே இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்தாண்டு துபாயில் நடந்த விபத்துகளிலேயே இந்த விபத்தில் தான் அதிகம் பேர் இறந்துள்ளனர்’ என்று, அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
Tamil siragugal news : English Summary :
Dubai:
10 Indians killed in a Road Accident at Dubai
“It’s definitely the biggest accident so far this year,” he was quoted as saying in local media. “So many people died and so many others were injured. It was a big disaster.”
Maj-Gen Khamis Mattar Al Mazeina, commander-in-chief, Dubai Police, were among first to rush to the accident site. Further investigations are on. Expatriates, many of them Asian, make up the great majority of Dubai’s 2.2 million population.