India has set a new record in voter turnout in the lok sabha elections 2014.
இந்திய வரலாற்றில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு 1984-85ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானது தான இதுவரை அதிகபட்ச வாக்கு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நடந்த 1984-85ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் வரும் 16ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.