பிற கட்சியிலிருந்து 50 பேர் பா.ஜ.க வில் சேர்ந்தனர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் நிறைமதி எனும் கிராமத்தில் தி.மு.க., - ம.தி.மு.க.,வினர் 50 பேர் பா.ஜ.க வில் இணைந்தார்கள். கள்ளக்குறிச்சி பா.ஜ.க ஒன்றிய தலைவர் நடராஜன் முன்னிலையில், நிறைமதி கிராமத்தில் தி.மு.க., கிளை செயலாளர் கதிரவன் தலைமையில் தி.மு.க., - ம.தி.மு.க., வினர் 50 பேர் பா.ஜ.க வில் இணைந்தனர.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் நிறைமதி எனும் கிராமத்தில் தி.மு.க., – ம.தி.மு.க.,வினர் 50 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்கள். கள்ளக்குறிச்சி பா.ஜ.க ஒன்றிய தலைவர் நடராஜன் முன்னிலையில், நிறைமதி கிராமத்தில் தி.மு.க., கிளை செயலாளர் கதிரவன் தலைமையில் தி.மு.க., – ம.தி.மு.க., வினர் 50 பேர் பா.ஜ.க வில் இணைந்தனர். பா.ஜ.க வில் இணைந்தவர்களுக்கு மாவட்டத் தலைவர் பாலசுந்தரம், சிறப்பு விருந்தினர் டில்லி பா.ஜ.க, தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாவட்ட தலைவர் முருகன் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் மதியழகன், பா.ஜ.க அறிவுசார் பிரிவு மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, பா.ஜ.க விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் துரை, பா.ஜ.க ஐ.டி., செல் மாவட்டத் தலைவர் தாமரை சிவா, பா.ஜ.க ஒன்றிய பொதுச்செயலாளர் முத்தையன், செயலாளர் தங்கம், ஒன்றிய செயலாளர் ஜெய்கணேஷ்,…

Read More

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்கள்: சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் இருவரும் இடமாற்றம் | Reshuffle in the police in Tamil Nadu, 12 IPS officers have been transferred to another department

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்கள்: சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் இருவரும் இடமாற்றம் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார், சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் நேற்று முன் தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று மீண்டும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில் குறிப்பாக, நேற்று முன் தினம் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமாருக்கும் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ளார். தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் விவரம் தேவகோட்டை சப்-டிவிஷன்…

Read More

பள்ளி ஆசிரியைக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கறிஞர் மீது வழக்கு

திருவள்ளூர்: 1 வாரமாக காணாமல் போன திருவள்ளூர் பெண் இறந்து கிடந்தார், இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்

கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு காணொளி வழியாக வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். இதனால் குறுகிய காலத்திலேயே இவருக்கு ஏராளமான விளம்பர வாய்ப்புகள் தேடி வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொச்சியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வழக்கறிஞர் இவரை அணுகி தனது நண்பர் ஒருவர் சினிமா எடுப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று ஆசிரியை சாய் ஸ்வேதா கூறியுள்ளார். இந்நிலையில் சில நாட்கள் கழித்து சமூக இணையதளங்களில் ஆசிரியை சாய் ஸ்வேதாவுக்கு எதிராக ஆபாசமான கருத்துகள் பகிரப்பட்டன. இது குறித்து அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இது…

Read More

வழக்குரைஞர்கள் கோட், கவுன் அணிய விலக்கு: சென்னை உயர்நீதிமன்றம்

சகிப்புத்தன்மை மற்ற மத நடைமுறைகளுக்குக் காட்டப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் Tamil Siragugal: Tamil News blog | தமிழ் செய்தி சிறகுகள்

கொரோனா பரவல் காரணமாக வழக்குரைஞர்கள் கோட், கவுன் அணிய விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தகடந்த மார்ச் 24-ம் தேதி முதல், தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன. அவசர வழக்குகள் மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வழக்குகள் தேக்கம், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது தமிழகத்தின் 29 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கீழமை…

Read More

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தற்கொலை, அரசு வேலை மோசடி ?

சென்னை உயர்நீதிமன்ற மற்றும் செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும் ராஜேஷ்குமார் (37). இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு மனைவி மற்றும் ௨ ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலை நகர் வசித்து வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தற்கொலை.. இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தனக்கு நண்பர்கள் துரோகம் செய்துவிட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் எழுதிய தற்கொலை கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற மற்றும் செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும் ராஜேஷ்குமார் (37). இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு மனைவி மற்றும் ௨ ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலை நகர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூரில் உள்ள தனது தந்தையை பார்க்க ராஜேஷ்குமார் வந்துள்ளார். ராஜேஷ்குமார் தற்கொலை அப்போது கால் வலி இருப்பதாக கூறி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்தவர் வீட்டின்…

Read More

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட நீதிமன்றங்களில் செப் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை

சகிப்புத்தன்மை மற்ற மத நடைமுறைகளுக்குக் காட்டப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் Tamil Siragugal: Tamil News blog | தமிழ் செய்தி சிறகுகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட நீதிமன்றங்களில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை… சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தவேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கீழமை நீதிமன்றங்கள் முன்பே திறக்கப்பட்டுவிட்டன. வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும், சாட்சிகளுக்கும் மட்டும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவர். நீதிமன்ற வளாகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய, முதன்மை நீதிபதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற பணிகள் பற்றி செப் 22-ம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் திரு குமரப்பன் அறிவித்துள்ளார்.

Read More

சென்னையில் தொழில்வரி, சொத்துவரி, செலுத்த செப். 30 வரை அவகாசம்

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செப். 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொழில்வரி, சொத்துவரி, செலுத்த செப். 30 வரை அவகாசம் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செப். 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் துறையின் முக்கிய வருவாய் இனங்களான சொத்துவரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் உட்பட வரி வருவாய் இனங்கள், வரி வருவாய் அல்லாத இனங்கள் / கட்டணங்கள் சென்ற நிதி (2019-20) ஆண்டின் 31மார்ச்2020க்குள் சொத்து உரிமையாளர்கள்/நிறுவனதாரர்களால் சட்ட விதிகளின்படி செலுத்தப்பட வேண்டும். கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி வரிவருவாய் இனங்களை வசூலிக்க இயலாத சூழ்நிலையில், செலுத்த வேண்டிய வரிவருவாய் இனங்களை (தொழில்வரி, தொழில்…

Read More

ஆன்லைன் வகுப்புக்களில் விதிமுறைகள் மீறப்படுகிறதா? அதை கண்காணிக்க அமைப்பு உருவாக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை

ஆன்லைன் வகுப்புக்களில் விதிமுறைகள் மீறப்படுகிறதா? அதை கண்காணிக்க அமைப்பு உருவாக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என கண்காணிக்கப்பதர்க்கு ஓர் அமைப்பை உருவாக்க  வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் கடந்த முறை  விசாரணைக்கு வந்த போது,  தனியார் பள்ளிகளில் ஆன் லைன்  வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை எப்படி பின்பற்றப்படுகிறது? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்?  தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துகிறார்களா? என்பது தொடர்பாக கேள்விகளை உயர் நீதிமன்றம் நீதி அரசர்கள் எழுப்பியிருந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு…

Read More

சென்னையில் பேருந்துகள் ஓடத் துவங்கியது

சென்னை: பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னையில் பேருந்துகள் ஓடத் துவங்கின.

சென்னை: பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னையில் பேருந்துகள் ஓடத் துவங்கின. கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து சேவை சுமார் 160 நாள்களுக்குப் பின்னர் இன்று காலை ஓட துவங்கியது. முதல் நாள் என்பதால் கூட்ட நெரிசலை காண முடியவில்லை. சென்னையின் சில முக்கியப் பேருந்து நிலையங்களைப் பொறுத்தவரை இரயிலில் இருந்து வரும் பயணிகள் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல பேருந்துகளை நாடுவர். தற்போது இரயில் சேவை இயக்கப்படாததாலும், பல தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாலும், முதல் நாளான இன்று பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை என்றும் கருதப்படுகிறது. தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 மாதங்களுக்கு முன்…

Read More

நீல திமிங்கலம் தமிழ்நாடு கடற்கரையில் கரை ஒதுங்கியது

திமிங்கலத்தின் நீளம் 20 மீட்டர் என்றும் அவை தற்போது அதன் வயதைக் காக்க முடியவில்லை என்றும் வனத்துறை அதிகாரி சிக்கந்தர் பாஷா தெரிவித்தார். புதுடெல்லி: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழகத்தின் வாலிநோக்கம் கடற்கரையில் இருபது மீட்டர் நீளமுள்ள நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது. பிரேத பரிசோதனை செய்த வன அதிகாரிகள், கடலில் திமிங்கலம் கப்பலில் மோதியதாக சந்தேகிக்கின்றனர். திமிங்கலத்தின் வயதை அவர்களால் கணக்கிட முடியவில்லை என்று வனத்துறை அதிகாரி சிக்கந்தர் பாஷா ஞாயிற்றுக்கிழமை என்டிடிவிக்கு தெரிவித்தார். “இது ஒரு நீல திமிங்கிலம். நாங்கள் பிரேத பரிசோதனை முடித்துவிட்டோம். திமிங்கலம் ஒரு பெரிய கப்பலால் தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று திரு பாஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார் ஜூன் மாதத்தில், அதே மாவட்டத்தில் 18 அடி நீளமுள்ள, ஒரு கால் திமிங்கல சுறாவின் சடலம் கரைக்கு வந்தது.…

Read More