chennai court sentenced 5 years imprisonment youngster சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் தென்னரசு (வயது29). இவர், அதே பகுதியில் உள்ள ‘பீரோ’ விற்பனை நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் ஷீலா என்ற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளம்பெண்ணை காதலித்தார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது 6 மாதத்துக்குள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதற்கிடையில், ஆவடியில் உள்ள தன் சகோதரன் வீட்டுக்கு ஷீலாவை அழைத்துச் சென்று அங்கு அவருடன் தென்னரசு உடல் உறவுக் கொண்டார். இதன்பின்னர், அவரை திருமணம் செய்ய தென்னரசு மறுத்து விட்டார். பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, ஷீலா கொடுத்த புகாரின்…
Read MoreYear: 2014
கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்….
Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்…. மாணவனை பள்ளியை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு.. சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்து இருக்கும் மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 500 க்கும் கூடுதலான மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கணினி ஆசிரியராக புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சார்ந்த திருமதி.லட்சுமி (வயது 36) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நேற்று மாலை கணினி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கணினியை திடீரென புகுந்து அணைத்து விட்டான். இதனால் மாணவன் ஆகாஷை…
Read Moreஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி செய்த வாலிபருக்கு கல்லூரி மாணவிகள் கையால் பெல்ட் அடி.
youth attacked by Eve tease victim college Girls in Haryana ஹரியானா மாநிலத்தில் ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட வாலிபரை கல்லூரி மாணவிகள் தாங்கள் அணிந்திருந்தப் பெல்டால் அடித்து உதைத்தனர். கல்லூரி முடித்து வீடு திரும்பும் வழியில், பஸ்ஸில் பயணம் செய்த சகோதரிகள் இருவரை, அதே பஸ்ஸில் பயணம் செய்த கொண்டிருந்த ஒரு வாலிபர் தொடர்ந்து கேலி செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளார். அந்த வாலிபர் டீசிங் செய்வதை கண்டும் காணாதது போல் மற்ற பயணிகள் இருந்த போதிலும் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த சகோதரிகள் கேலி செய்த வாலிபரை கடுமையாக தாக்கினார்கள். இந்த கடும் தாக்குதலால் நிலைகுலைந்த ஈவ் டீசிங் செய்த வாலிபரை, பஸ்சின் கண்டக்டர் அருகே இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் தீவிர…
Read Moreநேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை – ஆடுகள் கொன்று குவிப்பு ….
more than 5,000 buffaloes, sheeps, goats and other Birds animals slaughtered in Nepal animal sacrifice ritual நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை-ஆடுகள் கொன்று குவிப்பு …. காட்மாண்டு, நவ. 29– நேபாள கால்நடை பலி திருவிழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன. நேபாள நாட்டின் பாரா மாவட்டத்தில் இருக்கும் பரியபூர் எனும் கிராமத்தில் கதிமாங் அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஓர் முறை மிகப்பெரிய கால்நடைகளை பலிகொடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கால்நடை பலி திருவிழா நேற்று துவங்கியது. 2 நாட்கள் மட்டும் நடக்கும் இந்த பலி திருவிழாவில் பல்லாயிரகணக்கான கால்நடைகள் பலியிடப்படுகின்றன. தலா ஓர் பன்றி, புறா, வாத்து, சேவல், எருமை போன்றவற்றை…
Read Moreகேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…
Kerala planned new Pambar : T N government moved to the Supreme Court seeking directions to restrain Kerala from proceeding with the construction of a dam with a storage capacity of two tmcft across river Pambar at Pattissery in Idukki district. புதுடெல்லி: கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் அமராவதி அணை 1958-ம் ஆண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும்…
Read Moreஇலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…
Read Moreசென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு
Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி…
Read Moreதாயின் சடலத்துடன் செல்பி எடுத்துகொண்ட மகன்!
Lebanese takes selfie with dead mother… after digging up grave லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதிலும்,…
Read Moreஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.
40 people were killed in Afghanistan Volley ball tournament and about 60 people seriously injured ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம். ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இருக்கும் பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான (கை பந்து ) வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த கைபந்துப்போட்டியை காண ஏராளமான மக்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். அப்பொழுது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்ட பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டார்கள். மேலும் சுமார் 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.…
Read Moreமங்கள்யான் 2014ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஓன்று 'டைம்' பத்திரிகை பாராட்டு
Mangalyaan Among Best Inventions of 2014: TIME Magazine 2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான் என்று டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலமும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து டைம்ஸ் பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது, யாருமே முதல் முறையில் செவ்வாய்க்கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பவில்லை. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா தோல்வி அடைந்தது. ஆனால் செப்டம்பர் 24ம் தேதி இந்தியா அதை சாத்தியமாக்கியது. அன்று தான் மங்கள்யான் செவ்வாய்கிரகத்திற்குள் நுழைந்தது. வேறு எந்த ஆசிய நாடுகளாலும் செய்ய முடியாத சாதனையை இந்தியா செய்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் பட்டியலில் 2 இந்தியர்களின் கண்டுபிடிப்புகளும் இடம்பிடித்துள்ளன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள…
Read More