An Indian-origin student Asanish Kalyanasundaram hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam. இங்கிலாந்து – லண்டன்: இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அசானிஷ் கல்யாணசுந்தரம் (வயது 18) என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசானிஷ் கல்யாணசுந்தரம் எனும் இளைஞர், இங்கிலாந்து நாட்டில் இருக்கும் லங்காஷயர் பகுதியில் உள்ள பர்ன்லீ எனும் பகுதியல் தனது அன்னை திருமதி.சுஜாதாவுடன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள “புனித ஜோசப் பார்க் ஹில்” எனும் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் கடந்த பள்ளி இறுதித் தேர்வாகிய ‘ஏ’ லெவல் தேர்வில் கணக்கு, உயிரியல், நெருக்கடியான சிந்தனை, வேதியல் மற்றும் இயற்பியல், ஆகிய 5 பாடங்களிலும் 100% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.…
Read More