மத்தியப் பிரதேசத்தில் சென்ற ஓராண்டில் மட்டும் 10,577 குழந்தைகள் மாயம்

10,577 FIRs filed on missing children in one year, MP govt tells SC மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 90 சதவீதம் குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 3370 பெண் குழந்தைகள்…

Read More

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கண்டித்தும், 5 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம்…

Read More

ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிப்பு.

ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா  நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தற்சமயம் நலமாகி வருவதாகவும், பொதுமக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை எனவும் இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது, லைபீரியா நாட்டில் இருந்த அந்த நபருக்கு எபோலா நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளார். எனினும் அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு புது தில்லியில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவருடைய நிலைமை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருகிறார்கள். ஆகவே, பொது மக்கள் எவரும் அச்சம் கொண்டு பீதியடைய அவசியம் இல்லை என அவர்கள் கூறினார்கள். மேலும் எபோலா நோய் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த நபருக்கு டெல்லியில்…

Read More

சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலி

Two killed as portion of old building collapses in Chennai சென்னை பாரிமுனையில் பலசரக்குக் கிடங்கின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி நேரில் ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னை பாரிமுனை மலையபெருமாள் கோயில் தெருவில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான பலசரக்குக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலசரக்குக் கடை ஊழியர் ராஜா (50), அருகிலுள்ள தேங்காய் கடையைச் சேர்ந்த சுபாஷ் (24), குமார் (50) ஆகிய மூவரும் இருந்தனர். அப்போது அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் மதில் சுவர் திடீரென சரிந்து, கிடங்கின் மேற்கூரை மீது விழுந்தது. இதில், இடிபாடுகளில் மூவரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல்…

Read More

ஆஸ்திரேலியா வின் குவீன்ஸ்லாந்து நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியினுடைய சிலையினை திறந்து வைத்தார்.

modi unveiled Mahatma Gandhi statue at Roma Park Street, Australia – Queensland ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள குவீன்ஸ்லாந்து நகரில்  இன்று நமது தேச தந்தை மகாத்மா காந்தியினுடைய சிலையினை திறந்து வைத்தார். வெண்கலத்தால் செய்யப்பட்ட காந்தியின் இரண்டரை மீட்டர் உயரம் கொண்ட உருவச்சிலையை ரோமா ஸ்ட்ரீட் பகுதியில் திறந்து வைத்த மோடி பேசியதாவது:- குஜராத்தின் போர்பந்தர் நகரில் அக்டோபர் மாதம் 2-ம் தேதி ஒரு மனிதர் மட்டும் பிறக்கவில்லை. ஒரு சகாப்தமே பிறந்தது. தனது வாழ்நாளின்போது இருந்தது போலவே இன்றும் காந்தி நம்முடன் உயிர்ப்புடன் இருப்பதாகவே நான் அழுத்தமாக நம்புகிறேன்.  காந்தியின் வாழ்க்கையையும், அவரது போதனைகளையும் நாம் ஆராய்கையில் இன்று இந்த உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும். ஒருவரின் சொல்லிலும், செயலிலும்…

Read More

காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம்

Cauvery delta districts Farmers Association have planned to intensify the protest against Karnataka Goverment’s proposal to construct two reservoirs across the Cauvery River at Mekedatu. காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் தஞ்சாவூர்: கர்நாடக மாநில அரசு, காவிரி ஆற்றில் புதிய தடுப்பு அணை கட்டும் திட்டத்தை கண்டனம் செய்து காவிரி டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலர் திரு.துரை மாணிக்கம் கூறுகையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதூது எனும் பகுதியில்,…

Read More

சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"

“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…

Read More

உலக நீரிழிவு நோய் நாள் – சர்வதேச சர்க்கரை நோய் தினம் – நவம்பர் 14

World Diabetes Day – Today.. சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது. இந்தியா, 2025ம் ஆண்டு, உலகத்தில் உள்ள மாற்ற நாடுகளை விட அதிகமான சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடாக இருக்கும். இந்தியாவில் ஆண்டுதோறும், 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் இறக்கின்றனர். தமிழகத்தில் மட்டும், பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே நவம்பர் 14ஆம் தேதி சர்வதேச சர்க்கரை நோய் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 70 சதவீதம் பேர் சர்க்கரை நோயினால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று உலக…

Read More

தமிழகத்தின் எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் குழு விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி புதிய வழக்கு

Petition requesting order to inquire Mineral resource related irregularities in tamilnadu by IAS officer Sagayam and Team at Madras High Court தமிழகம் முழுவதிலும் நடந்த எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் தலைமை தாங்கிய குழுவே விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. பசுமைத் தாயகம் எனும் ஓர் சமூக சேவை அமைப்பைச் சார்ந்த திரு.அருள் எனும் நபர் இந்த இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சட்டவிரோதமான முறையில் கனிமவளங்களை பயன்படுத்தியும் விற்றும் பலகோடிகளை ஏப்பம் விட்ட பல சமூகவிரோத செயல்கள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து வருவதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் மதுரையில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் முறைகேடு…

Read More

இந்தியாவில் நிமோனியாவல் 3.7 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்

Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013 இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறும்போது, ”உலக நிமோனியா நோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிமோனியா என்பது நுரையீரலை நுண் கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 3 நாட்களில் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் 3 நாட்களுக்கு மேலும்…

Read More