கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் சென்னை: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநில அரசின் இந்த காவிரி நதி அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் காவிரி நதியில் மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டம் தீட்டி இருப்பதாக அந்த கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அணை கட்ட சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு தொழில்நுட்ப ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களை நியமனம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே கர்நாடக…
Read MoreYear: 2014
அமெரிக்காவில் இறந்து விட்டதாகக் அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு
‘Miracle’ Woman Ruby Graupera-Cassimiro Survives After 45 Minutes Without Pulse பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்கு பிறகு நாடித்துடிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ(வயது 40). பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரூபிக்கு, சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்ததால், அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்துவிட்டது, எனவே உடல்நிலை மிகவும் மோசமாகி போனது. நாடித்துடிப்பும் குறையத் தொடங்கியதால் ரூபி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர், இதற்கிடையே பெண் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு, ரூபியின் உடலில் சிறு அசைவுகள் தென்படவே, மீண்டும் சிகிச்சை அளித்து உயிர்…
Read Moreதெலுங்கானாவில் ஆங்கிலம் பேச தெரியாத மாணவனை தலையை சுவற்றில் முட்டி ஆசிரியை தண்டனை : 6 வயது மாணவன் சாவு..
Boys head smashed by teacher at Tirumalagiri village of Anumula mandal in Nalgonda district. six year old boy smashed in a wall for not speaking english தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நல்கொண்டா மாவட்டம் திருமலைகிரி கிராமத்தை சார்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கிலம் பேச தெரியாததால் 6 வயது மாணவனை சுவற்றில் தலையை வைத்து இடித்து ஆசிரியை முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மட்டும் இன்றி தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓர் விவசாயினுடைய மகனான சந்து கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் வகுப்பறையில் ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமதி சிறுவனை அடித்ததுடன் அவரது தலையை சுவற்றில் மோதியுள்ளார். சுவரில் நீட்டிக் கொண்டிருந்த…
Read Moreசத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் மரணம்
Chhattisgarh: Sterilisation surgery leaves 8 women dead, 55 still ‘in trouble’ சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தக்கட்பூரில் அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் நடந்தது. இதில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் இறந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் புறநகரில் பென்தாரி கிராமத்தில் நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8 ஆம் தேதி நடந்த கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் அந்தப் பெண்கள் மருந்துகள் வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களில் 29 பெண்கள், வாந்தி மற்றும் வயிற்று வலி என பல்வேறு பிரச்சனை காரணமாக பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
Read Moreஇந்தியா பாகிஸ்தான் எல்லை சிந்து மாகாணத்தில் வறட்சியலும், சுகாதார குறைபாட்டாலும் 11 மாதங்களில் 275 குழந்தைகள் பலி
275 children dead poor health care pakistan sindh state indian border பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வறட்சியின் பாதிப்பாலும், சுகாதார குறைபாட்டாலும் 275 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரமுள்ள சிந்து மாகாணத்தின் தார்பார்க்கர் மாவட்டம், அகன்ற பாலைவனப் பிரதேசமாகும். இங்கு வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 35 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது கடந்த 1998 ஆம் ஆண்டு இப்பகுதியில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது. வானம் பார்த்த பூமியாக உள்ள தார்பார்க்கர் மாவட்டம், பெரும்பாலும் பருவமழையை மட்டுமே நம்பியுள்ளபோதிலும், காலத்தில் பெய்ய வேண்டிய பருவமழை, இப்பகுதியில் வசிக்கும் மக்களை ஒவ்வொரு ஆண்டும் வஞ்சித்தே வந்துள்ளது. இதனால், உண்டான வறட்சி மற்றும் சுகாதார குறைபாட்டின் விளைவாக ரத்தசோகை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தத்தில் நோய்க்கிருமித் தொற்று, பிறக்கும்போது ஏற்படும் சுவாசக் கோளாறு போன்ற உபாதைகளால் கடந்த…
Read Moreசீருடையுடன் ஊர்வலம் சென்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது
RSS workers arrested across Tamil Nadu ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடையை மீறி சீருடை அணிந்து ஊர்வலம் செல்ல முயன்றதால் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000 ஆவது ஆண்டு தொடக்க விழா, ஆர்.எஸ்.எஸ்., தொடங்கியதன் 90ஆவது ஆண்டு, விவேகானந்தரின் 159 ஆவது பிறந்த நாள், மற்றும் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், திருவண்ணாமலை காமராஜர் சிலை பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரண்டனர். பின்னர், தொண்டர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து ஊர்வலத்துக்குத் தயாராகினர். அப்போது, பாதுகாப்புக்காக வந்திருந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்க உங்களுக்கு அனுமதி இல்லை…
Read Moreராணுவம் மற்றும் விமானப் படைக்கு 440 ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு…
Indian Army and air force including Armed forces are acquiring 440 helicopters.. proposed to buy புது டில்லி:விமானப் படை மற்றும் ராணுவ பயன்பாடு உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் தேவைகேற்ப 440 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு திட்டம் திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் திரு.அருண் ஜேட்லி கூறியுள்ளார். இந்திய விமானப்படை மற்றும் இராணுவம், உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுடைய பயன்பாட்டுக்காக 440 இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது இவற்றில் சில ஹெலிகாப்டர்கள் வெளிநாடுகளிலிருந்தும், பெரும்பாலானவை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தும் வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தவிர்த்து மேலும் போக்குவரத்து பயன்பாட்டிற்கு 56 விமானங்கள் வாங்கப்பட இருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு.அருண்ஜெட்லி தில்லியில் கூறினார். ராணுவம் மற்றும் விமானப் படைக்கு 440 ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு… NEW DELHI: Indian Army and air…
Read Moreஉலகம் முழுவதும் உயிர் கொல்லி எபோலா வைரஸ் தாக்கி 13,268 பேர் பாதிப்பு; 4,960 பேர் சாவு
ஜெனீவா: உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் தாக்கி உலகம் முழுதும் சுமார் 13,268 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அதில் 4,960 பேர் இறந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், உயிர்கொல்லி எபோலா நோயினால் தக்கபட்டவர்களில் 70 சதவீதம் பேர் இறந்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுவதனால், நிஜத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்ககூடும் என அஞ்சபடுகிறது. ஆப்பிர்க்க கண்டத்தில் இருக்கும் லைபீரியா நாட்டில் எபோலா நோய் பாதித்த 6,619 நபர்களில் 2,766 பேர் உயிரிழந்துள்ளனர். சியரா லியோனிலுள்ள 4,862 எபோலா நோயாளிகளில், 1,130 பேர் உயிரிழந்தனர்.கீனியா நாட்டில், எபோலா தாக்கிய 1,760 பேரில் 1,054 பேர் அந்த நோய்க்கு இறந்துள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [contact-form][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Email’ type=’email’ required=’1’/][contact-field label=’Website’ type=’url’/][contact-field label=’Comment’ type=’textarea’…
Read More2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ப.சிதம்பரம் மன்மோகன் சிங் மீது குறை கூறினார்…
Manmohan Singh criticised by chidambaram for 2G scam 2ஜி ஊழல் குற்றச்சாட்டு பூதாகரம் ஆகும் முன்பே அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை மன்மோஹன்சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இந்த ஊழல் விவகாரத்தில் தலையிட்டு உரிமங்களை ரத்து செய்யும் வரை மன்மோகன் அரசு காத்திருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் இவ்வாறு உரையாற்றினார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் முதன் முதலில் வந்தோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த சுமார் 122 உரிமங்களை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை,…
Read Moreசாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்ட விரோதம் : உச்சநீதி மன்றம் தீர்ப்பு..
No Caste based census : Supreme court Judgement புதுடெல்லி, நவம்பர் : 07– சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்டவிரோதமானது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஓர் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிய ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்தபட வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்று சென்னை உயர் நீதி மன்றம் சாதிய வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதி மன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதி…
Read More