spicejet rams over a buffalo at surat airport குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் எருமை மாட்டின் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து நேற்றிரவு 7.20 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி 622 ரக விமானம் டெல்லி கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தது. ஓடுதளத்தில் அந்த விமானம் பயணிக்க தொடங்கியபோது திடீரென எருமை மாடு என்று குறுக்கே வந்தது. அந்த மாடு விமானத்தின் பக்கவாட்டில் மோதியது. இந்த சம்பவத்தால் விமானத்தின் பக்கவாட்டு பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விமானி, உடனடியாக விமானத்தின் வேகத்தை குறைத்து நிறுத்தி, பார்க்கிங் பகுதிக்கு விமானத்தை கொண்டு சென்று நிறுத்தினார். இச்சம்பவத்தால் விமானத்தில்…
Read MoreYear: 2014
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஆய்வு குழு: சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
Sagayam, an IAS officer as a special commissioner to probe the mining irregularities ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து கனிமவள முறைகேடு குறித்த அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக பிரபல சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாரயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.சோமையாஜி, அந்த அரசாணையைத் தாக்கல் செய்தார். மேலும் அவர், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.இராஜாராமன், சகாயம் நியமனம் மதுரை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் வகையில் உள்ளது என்றும், தமிழகம் முழுவதும் நடைபெற்ற கனிம முறைகேடுகளை…
Read Moreபிரேசிலில் ஒருவரின் வயிற்றில் உயிருடன் 2 அடி மீன் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
The stomach-churning moment a huge LIVE fish is removed from a man’s intestine பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து நீளமான மீனை மருத்துவர் உயிரோடு அகற்றினார். அப்போது உடன் இருந்த மருத்துவர்கள் அதனை வீடியோ எடுத்ததுடன், கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த நபர்,…
Read Moreதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.
subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…
Read Moreசென்னையில் துப்பாக்கி முனையில் மருத்துவர் வீட்டில் பணம் நகை கொள்ளை
Chennai doctor’s wife robbed at gunpoint சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள், 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை…
Read Moreதமிழ்நாடு காவல் துறைக்கு புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குனர் : திரு.அசோக் குமார் நியமனம்.. Tamilnadu new DGP Mr.Ashok Kumar.
Tamilnadu new DGP – Mr.Ashok Kumar. தமிழ் நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குநராக உளவுத்துறை டி.ஜி.பி.யாக இருந்த திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையினுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கே.ராமானுஜம் நவம்பர் மாதம் 4-ம் தேதியோடு பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி, அந்தப் பணிக்கு தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றிய திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் திரு.மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்துள்ளார். இதனிடையே மேலும், ஓய்வு பெறும் டி.ஜி.பி. திரு.ராமானுஜத்தை தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமித்து உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். புதிய டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.அசோக் குமார், ஹரியாணா…
Read Moreஐந்து காசுக்காக 41 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் வழக்கு
DTC spent Rs 47,000 in case against conductor for loss of 5 paisa கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவரிடம் ஐந்து பைசா குறைவாக டிக்கெட் பணம் வாங்கியதாக நடத்துனர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் செலவு தற்போது நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக டெல்லி போக்குவர்த்து கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் (டி.டி.சி.) பணியாற்றிய நடத்துனர் ரன்பீர் சிங் என்பவர் பயணி ஒருவரிடம் 15 காசு மதிப்புள்ள டிக்கெட்டிற்கு 10 காசு மட்டுமே பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 1976ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ரன்பீர். இதற்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும்…
Read Moreவாகா எல்லைச் சாவடியில் நேற்று (02 நவம்பர் 2014) மாலை நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைவீரர்கள் 3 பேர் உள்பட 55 பேர் சாவு. : பிரதமர் மோடி கண்டனம்…
Wagah Suicide attack : 55 Pakistani people, including women and children, were killed and about 200 were injured in a suicide bomb attack at the Wagah checkpoint near Lahore and along the India-Pakistan border on Sunday evening. No damage was reported on the Indian side. இந்திய – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லைச் சாவடி அருகில் நேற்று (02 நவம்பர் 2014) மாலை நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தானை சார்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் உள்பட 55 பேர் இறந்தனர். மேலும் சுமார் 200 பேர் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வாகா… இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும், இடையே இருக்கும் எல்லைப் பகுதி . இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அமிர்தசரஸிலிருந்து பாகிஸ்தானுக்கு…
Read Moreஸ்ரீபெரும்புதூர் நோக்கியா அலைபேசிச்தொழிற்சாலை மூடல்.. : Sriperumbudur Nokia Factory closed
Sriperumbudur Nokia Factory closed ஸ்ரீபெரும்புதூரில் பெங்களூர் நெடுஞ்சாலையில் பிரபலமாக இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை சனிக்கிழமை மூடப்பட்டது. இதைநயடுத்து, அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்களுக்கு திரும்பவும் வேலை வழங்க வேண்டும் என கோரி தொழிற்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த நோக்கியா அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலை வரும் நவம்பர் மாதம் முதல் தேதியான சனிக்கிழமை முதல் மூடப்படுவதாக நோக்கியா நிர்வாகம் முன்பே தெரிவித்திருந்தது. அதன்படி, 01/11/2014 – சனிக்கிழமை முதல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுத் திட்டம் மூலம் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், தொழிற்சாலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்து வந்த 2000…
Read Moreகலைஞர் டிவி க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம்… ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு
A Raja, DMK MP Kanimozhi and others under section 120-B (criminal conspiracy) of IPC புதுடெல்லி, அக்.31: கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது மனைவி தயாளு அம்மாள் உள்பட பத்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாளு அம்மாளை ரூ.5 லட்சத்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருவர் உத்தரவாதம் ஆகியவற்றின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்தார். கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்…
Read More