டெல்லி :ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி சுரேஷ்குமார் கைட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். பாரின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய நீதி அமைச்சர் என்பதால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
Read MoreMonth: September 2019
மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குடிப்பதற்கு பொருந்தாது: டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி :டெல்லி கலால் சட்டம், 2009 இன் 23 வது பிரிவை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.மனு தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் சி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு வயது 25 ஆண்டுகள்,ஆனால் டெல்லி கலால் சட்டத்தின் கீழ் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் என்பது ஒருதவறான கருத்து என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதனால் டெல்லி கலால் சட்டம், 2009 இன் 23 வது பிரிவை ரத்து செய்ய கோரும் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Read Moreமருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
மதுரை: மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா ஆகியோர் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்து மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்த கோரி மனுதாக்கல் செய்தனர்.மனு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ் பெறுவதில் விதிமீறல் ஏதேனும் செய்திருந்தால் மாணவர்களின் சான்றிதல்களை மீண்டும் சரிபார்க்கலாம் என்று தெரிவித்தார்.ஆனால் மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்துவது வாய்ப்பு இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
Read Moreசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி கே தஹில்ரமணி ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்
சென்னை :சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்தனர் .இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார்.நேற்று ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்.
Read Moreஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதித்துறை காவல் அக்டோபர் 3 வரை நீட்டிப்பு
டெல்லி: சிறப்பு சிபிஐ நீதிபதி அஜய் லுமார் குஹார் இன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் நீதித்துறை காவலை அக்டோபர் 3 வரை நீட்டித்தார்.சிதம்பரம் ஏற்கனவே 14 நாட்கள் நீதித்துறை காவலில் உள்ளதாக சிதம்பரத்தின் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிட்டனர்.சிதம்பரம் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.சிதம்பரத்தின் நீதித்துறை காவல் அக்டோபர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read Moreஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை ஏன் மனுதாரர் அணுக முடியவில்லை – உச்சநீதிமன்றம்
டெல்லி: அனுராதா பாசின் மற்றும் காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய்,போப்டே மற்றும் அப்துல் நசீர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவில் காஷ்மீரில் தகவல் தொடர்பு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு இணைப்புகள் செயல்படாததால் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு நீதிபதி போப்டே கேள்வி எழுப்பினார்.பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் தகவல் தொடர்பு மூடப்பட்டுள்ளது.செய்தித்தாள்களை வெளியிடுவதில் எந்த தடையும் இல்லை, இப்பகுதியில் இருந்து பல செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன என்று அரசு முதன்மை ஆதரவுரைஞர் தெரிவித்தார்.மனுதாரர் தானாக முன் வந்து முடியதாக தெரிவித்தார். இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
Read Moreகாஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: குழந்தை உரிமை நிபுணர் எனாக்ஷி கங்குலி மற்றும் பேராசிரியர் சாந்தா சின்ஹா தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை ஊடகங்கள் தெரிவித்தது.சுதந்திரம் மற்றும் உயிர் இழப்பு மீறல்களை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் . தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உயர்நீதிமன்றத்தின் சிறார் நீதிக் குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் .அவர்களை சிறார் நீதிக் குழுவின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும்.சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியினருக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்க வேண்டும். பிறகு அந்த தொகையை அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர்.
Read Moreவிவாகரத்து வழக்கில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்த கணவர்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கர்நாடகா: விவாகரத்து மனுவில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்ததால் மனைவியால் மனுவிற்கு பதில் அளிக்க முடியவில்லை. ரேணு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்ற தர்வாட் கிளையில் விவாகரத்து மேல்முறையிடு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தெரிவித்தது என்னவென்றால் “என் பெற்றோர் வீடு ராஜஸ்தான் மாநிலம் ஷிரோனியில் உள்ளதால் அங்கு இணை உரிமைகளை மறுசீரமைத்தல் (restitution of conjugal rights) மனுவை தாக்கல் செய்தேன். அப்போது தான் என் கணவருக்கு விவாகரத்து கிடைத்தது பற்றி தெரியவந்தது. தீர்ப்பு நகலை பார்த்த பிறகு தான் எனது விவரங்களை தவறாக கொடுத்து மனுவிற்கு நான் பதில் அளிக்காத அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது”என்று மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதி சத்யநாராயணா மற்றும் நீதிபதி பாட்டில் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் விவாகரத்து வழக்கை புதிய வழக்காக நடத்த உத்தரவிட்டனர்.…
Read Moreதலைமை நீதிபதி இடமாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு – உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
Read More