RSS has no role in government formation : Senior Leader of BJP Mr.Venkaiah Naidu பா.ஜ.க. மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடாது : வெங்கையா நாயுடு., புதுடில்லி:மத்திய அமைச்சரவை அமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடும் எந்தவிதத்திலும் இருக்காது என பா.ஜ.க., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மேலும் அரசாங்க நிர்வகாக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்., தலையிடும் எனும் பேச்சுக்கே இடமில்லை. அரசு செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடாது. நாங்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர்களே. மரியாதையை நிமித்தமாக நான் இங்குள்ள மூத்த தலைவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன். இது எங்களுடைய வழக்கமாக செயல்பாடுகளில் ஒன்று தான். மேலும் ஆர். எஸ்.எஸ்., இயக்கம் ஒரு தேசபற்றை வளர்க்கும் தேசிய நலன் அமைப்பு. இந்த இயக்கத்தில், நம் நாட்டினுடைய நலன்கள் பற்றி ஆலோசனை வழங்கி அதன் மூலம்…
Read MoreTag: மத்திய அரசு
திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் : சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம்
Transgenders are the ‘third gender’, rules Supreme Court திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட் திருநங்கைகளுக்கு சிறப்பு பொது கழிப்பறைகளை கட்டவும், அவர்களின் மருத்துவ பிரச்னைகளை கவனிக்க சிறப்பு துறைகளை அமைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுநாள் வரை திருநங்கைகள் தங்களது பாலினத்தை ஆண் அல்லது பெண் ஆக குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு. மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கைகளை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள்…
Read More5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்
11,820 custodial deaths in 5 years லாக்அப் சாவுகளை தடுத்தல், விசாரணைக்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை உண்டாக்குதல் ஆகியன சம்பந்தமாக டி.கே.பாசு என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 27 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சிங்வி ஆஜராகி கூறியதாவது:- குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் காவல்துறையின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லாக்அப்…
Read Moreமுட்டாள் அரசியல்வாதிகள் என பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் பரபரப்பு பேட்டி
Bharat Ratna awardee Scientist CNR Rao calls politicians ‘idiots’ addressing a press conference a day after the award was announced பிரதமரின் அறிவியல் ஆலோசனைகுழுவினுடைய தலைவர பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தியாவின் உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், பெங்களூரில் சி.என்.ஆர். ராவ் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அறிவியல் ஆராய்ச்சியினுடைய தரம் ஏதும் குறைந்து இருக்கிறதா என்று ஓர் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய சி.என்.ஆர். ராவ், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை ஒப்பிடும்போது அதைவிட வேகமாகமாகவும் அதிகமாகவும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த முட்டாள் அரசியல்வாதிகள், விஞ்ஞான…
Read Moreஇறுதியாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்திய கடற்படையில் சேர்ந்தது -வீடியோ இணைப்பு
India finally included INS Vikramaditya, after 9-years delay இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நேற்று சேர்க்கப்பட்டதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது. ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் அந்த கப்பலை, இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. இதன்படி அந்த கப்பலை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும், அதற்கான செலவுகளை இந்தியா ஏற்பது எனவும் முடிவானது. ரஷ்யாவின், செவ்மாஷ் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக 9,300 கோடி ரூபாயை மத்திய அரசு…
Read More