சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருவதை அடுத்து, சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சந்தையில் இன்று தகுதி ஆய்வு மேற்கொண்டனர். சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மே மாதம் சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக திருமழிசை, மாதவரம், வானகரம் பகுதியில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்ட்டது. இந்த சந்தைகளில் பெரும்பாலும் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், மாற்றப்பட்ட பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததாலும், புறநகர் பகுதியில் இருப்பதால் விற்பனை மந்தமாகவே உள்ளது எனவும் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு, கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்க அனுமதி…
Read MoreYou are here
- Home
- அங்காடி நிர்வாகக் குழு அதிகாரி கோவிந்தராஜன்