Kerala planned new Pambar : T N government moved to the Supreme Court seeking directions to restrain Kerala from proceeding with the construction of a dam with a storage capacity of two tmcft across river Pambar at Pattissery in Idukki district. புதுடெல்லி: கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் அமராவதி அணை 1958-ம் ஆண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும்…
Read MoreTag: விசாரணை
இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…
Read Moreசென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு
Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி…
Read Moreதமிழகத்தின் எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் குழு விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி புதிய வழக்கு
Petition requesting order to inquire Mineral resource related irregularities in tamilnadu by IAS officer Sagayam and Team at Madras High Court தமிழகம் முழுவதிலும் நடந்த எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் தலைமை தாங்கிய குழுவே விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. பசுமைத் தாயகம் எனும் ஓர் சமூக சேவை அமைப்பைச் சார்ந்த திரு.அருள் எனும் நபர் இந்த இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சட்டவிரோதமான முறையில் கனிமவளங்களை பயன்படுத்தியும் விற்றும் பலகோடிகளை ஏப்பம் விட்ட பல சமூகவிரோத செயல்கள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து வருவதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் மதுரையில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் முறைகேடு…
Read Moreஇந்தியாவில் நிமோனியாவல் 3.7 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்
Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013 இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறும்போது, ”உலக நிமோனியா நோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிமோனியா என்பது நுரையீரலை நுண் கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 3 நாட்களில் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் 3 நாட்களுக்கு மேலும்…
Read More2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ப.சிதம்பரம் மன்மோகன் சிங் மீது குறை கூறினார்…
Manmohan Singh criticised by chidambaram for 2G scam 2ஜி ஊழல் குற்றச்சாட்டு பூதாகரம் ஆகும் முன்பே அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை மன்மோஹன்சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இந்த ஊழல் விவகாரத்தில் தலையிட்டு உரிமங்களை ரத்து செய்யும் வரை மன்மோகன் அரசு காத்திருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் இவ்வாறு உரையாற்றினார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் முதன் முதலில் வந்தோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த சுமார் 122 உரிமங்களை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை,…
Read Moreசென்னையில் துப்பாக்கி முனையில் மருத்துவர் வீட்டில் பணம் நகை கொள்ளை
Chennai doctor’s wife robbed at gunpoint சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள், 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை…
Read Moreநாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்னை கழுத்தை நெறித்து கொலை
namakkal lady killed by unknown person நாமக்கல்லில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு . ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில்…
Read Moreடி.சி.எஸ். மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : – 850 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
uma maheswari Rape and Murder case : 850 pages charge sheet has been filed in Chengalpet court on Tuesday in the case of a software engineer uma maheswari by IT company Tata consultancy Services (TCS) who was brutally raped and murdered in February 2014. சென்னை ஏப்ரல் 30- சென்னை, கேளம்பாக்கத்தில் நடந்த டி.சி.எஸ். நிறுவன மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னையிலிருக்கும், கேளம்பாக்கம் பகுதி சிறுசேரி சிப்காட் வளாகத்திலிருக்கும் டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையில் இருந்தவர் உமாமகேஸ்வரி (வயது 24). கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதியன்று இரவு 10.30-க்கு பணியை முடிந்து விட்டு…
Read Moreஇலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே
Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…
Read More