கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் சென்னை: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநில அரசின் இந்த காவிரி நதி அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் காவிரி நதியில் மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டம் தீட்டி இருப்பதாக அந்த கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அணை கட்ட சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு தொழில்நுட்ப ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களை நியமனம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே கர்நாடக…
Read MoreTag: admk
தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலத்திற்கு மாரடைப்பு… மருத்துவமனையில் அனுமதி
Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital here today after he complained of uneasiness. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாச்சலம் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறைக்கு அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சென்றிருந்தார். திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital in coimbatore
Read Moreமாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி
admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில் அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…
Read Moreதமிழக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், முகமதுஜான் நீக்கம்
New Tamilnadu ministers of aiadmk Government ஜூன்.18, சென்னை: தமிழக அமைச்சரவையில் சி.த.செல்லபாண்டியன் மற்றும் ஏ.முகமது ஜான் இருவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். மேலும் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் எஸ்.அப்துல் ரகீம் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து ஆளுநர் அலுவலக மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ஏ.முகமது ஜான் மற்றும் தொழிலாளர் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஆகியோர் தமிழக அமைச்சரவரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழக துறை பொறுப்பை எஸ்.பி.சண்முகநாதன் வகிப்பார். அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியல் மரபினர் அயல்நாடு வாழ் இந்தியர்கள் அகதிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல்…
Read Moreநெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் நீக்கம்: நில மோசடி வழக்கு
AIADMK Tirunelveli rural north district secretary, a case of land-grabbing ஜூன் 07,2013, :திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க.,வின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.குமார்பாண்டியன். குற்றால நகராட்சியின் கவுன்சிலராகவும் உள்ளார். நெல்லை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுற்றுலா துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிப்பட்டு குமார்பாண்டியன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவரை அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா, பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இவர் குற்றாலம் கோவிலுக்கு சொந்தமான 73 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் அவசர பணத்தேவைக்காக அவர் குற்றாலத்தை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார்பாண்டியனிடம் நிலத்தின் பேரில் கடன் வாங்கினார். சமீபத்தில் சுப்பையா கடன் தொகை முழுவதையும் திருப்பிக் கொடுத்து விட்டு நிலத்தை மீண்டும்…
Read Moreசேது திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் : கருணாநிதி
sethusamudram shipping canal project karunanidhi birthday மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் கருணாநிதியின் 90-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (3 ஜூன் 2013) திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தை பூதங்கள் கட்டின என்பதுபோல தலைமைச் செயலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் (கருணாநிதி) வரை பார்த்து பார்த்து கட்டினோம். அதை மருத்துவமனையாக அறிவித்து, வேகவேகமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது.…
Read Moreகைவிடப்பட்ட போரூர் மேம்பாலம்: முதல்வர் கண்படமக்கள் எதிர்ப்பார்ப்பு
porur junction bridge not yet Completed பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகள்: பலமுறை முதல்வர் இந்த சாலையை கடந்தும் விடிவுகாலம் வரவில்லை போரூர் மேம்பாலத்திற்கு பூந்தமல்லி செல்லும் வழியில் இரண்டு தூண்களோடு முடிந்து விட்டது போரூர் மேம்பால பணிகள். பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மக்களும் சாலையை கடக்க உயிரையும் பணயம் வைக்கும் நிலையும் அடிக்கடி நிகழ்கிறது. காவல் துறையும் தங்களின் பணிகளை முடிந்தவரை சிறப்பாக செய்தாலும் நாளுக்குநாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. இன்னும் சில தினங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும் நிலையில் தண்ணீரும் தேங்கினால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டு மக்கள் மேலும் துயரத்துக்கு உள்ளாவோம் என அப்பகுதி மக்கள் வேதனைப் படுகின்றனர். போரூரில் 4 சாலைகள் சந்திக்கும் சிக்னலில் இருந்து மேற்கே போகும்…
Read More