International Boxing Association suspended pugilist Laishram Sarita Devi அண்மையில் நடந்து முடிந்த 2014-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியின் அரை இறுதி போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி சிறப்பாக விளையாடிய போதும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பெற்றார். இதனால் வீராங்கனை சரிதா தேவி கடும் அதிருப்தி அடைந்து தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தையும் பெற மறுத்தத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை தன்னை வென்ற தென் கொரியா வீராங்கனைக்கு அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், வெண்கலப்பதக்கம் சரிதா தேவியிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி மற்றும் மூன்று குத்து சண்டை பயிற்சியாளர்களையும் இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்க நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The…
Read MoreYou are here
- Home
- AIBA