Bus Transport started again between Andhrapradesh and Tamilnadu ஆந்திராவிற்கு கடந்த 2 மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுவதால் திருப்பதி திருமலை பிரமோற்சவத்துக்குச் சென்ற பக்தர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தெலங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆந்திர கடலோர மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பந்த் (வேலை நிறுத்தம்) அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் ஆந்திரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரதேசத்திற்கும் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாததிற்குப்பின் பதற்றம் சற்றே தணிந்து, தற்சமயம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில், சித்தூர் உள்பட்ட ஆந்திரபிரதேச எல்லை மாவட்டங்களுக்கு மட்டும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டன.…
Read MoreYou are here
- Home
- andhra bus