‘கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்பம் வறுமையில் வாடி அழுத குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாததால் அடித்து கொன்றேன்‘ என குழந்தை கொலையில் கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை கோயில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (28). இவரது மனைவி ஜோதிமணி (25). இவர்களுக்கு ஸ்ரீதேவி என்ற மகளும், ஒன்றரை வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். சத்யராஜுக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் ஜோதிமணி அழும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, குழந்தை திவ்யதர்ஷினி உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது, கணவர் சத்யராஜ், குழந்தையை அரிவாளால் தாக்கி கொன்று தீவைத்து கொளுத்திவிட்டு சென்று விட்டார்…
Read MoreYou are here
- Home
- Erode murder