ஃப்ரீஸருக்கு பதிலாக 11 வயது மகளை விற்ற தாய்

Argentine woman swaps 11 year old daughter for a freezer அர்ஜெண்டினாவில் ஒரு ஃப்ரீஸருக்காக பெற்ற மகளை தாயே விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் பாப்லா செசரினா. இவருக்கு வயது 30. நான்கு குழந்தைகளின் தாயான இவரின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.  இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். விசாரணையின் போது அச்சிறுமி, ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் தாய் என்னை ஒருவரிடம் விற்றுவிட்டார். அவர்கள் என்னை தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பினர். நான் இங்கு பாலியல் தொந்தரவு, மன உளைச்சல் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளேன் எனத்தெரிவித்து போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  இதனையடுத்து,…

Read More