20 killed in bus accident in Sirmaur in Himachal pradesh ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று (27 செப்டம்பர் 2013) காலை தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் சிர்மோர் மாவட்டம் ரேனுகாஜில் புறப்பட்டு உசாதிகார் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. தடாப்ரோக் எனும் பகுதியினில் சென்று கொண்டிருந்த போது சுமார் 550 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் 20 பயணிகள் பலியாகினர் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். 15 பயணிகள் விபத்து நடந்த இடத்திலும், 5 பேர் படுகாயமுற்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதும் பலியாகினர் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியான பயணிகள் எல்லோரும் உசாதிகார், அந்தாரி, மற்றும் ஹரிபூர் தார் பகுதிகளை சார்தவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் அங்கு…
Read MoreYou are here
- Home
- Himachal pradesh