Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்…. மாணவனை பள்ளியை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு.. சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்து இருக்கும் மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 500 க்கும் கூடுதலான மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கணினி ஆசிரியராக புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சார்ந்த திருமதி.லட்சுமி (வயது 36) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நேற்று மாலை கணினி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கணினியை திடீரென புகுந்து அணைத்து விட்டான். இதனால் மாணவன் ஆகாஷை…
Read MoreTag: india
இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…
Read Moreசோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"
“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…
Read Moreதமிழகத்தின் எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் குழு விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி புதிய வழக்கு
Petition requesting order to inquire Mineral resource related irregularities in tamilnadu by IAS officer Sagayam and Team at Madras High Court தமிழகம் முழுவதிலும் நடந்த எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் தலைமை தாங்கிய குழுவே விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. பசுமைத் தாயகம் எனும் ஓர் சமூக சேவை அமைப்பைச் சார்ந்த திரு.அருள் எனும் நபர் இந்த இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சட்டவிரோதமான முறையில் கனிமவளங்களை பயன்படுத்தியும் விற்றும் பலகோடிகளை ஏப்பம் விட்ட பல சமூகவிரோத செயல்கள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து வருவதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் மதுரையில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் முறைகேடு…
Read Moreஇந்தியாவில் நிமோனியாவல் 3.7 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்
Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013 இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறும்போது, ”உலக நிமோனியா நோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிமோனியா என்பது நுரையீரலை நுண் கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 3 நாட்களில் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் 3 நாட்களுக்கு மேலும்…
Read More2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ப.சிதம்பரம் மன்மோகன் சிங் மீது குறை கூறினார்…
Manmohan Singh criticised by chidambaram for 2G scam 2ஜி ஊழல் குற்றச்சாட்டு பூதாகரம் ஆகும் முன்பே அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை மன்மோஹன்சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இந்த ஊழல் விவகாரத்தில் தலையிட்டு உரிமங்களை ரத்து செய்யும் வரை மன்மோகன் அரசு காத்திருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் இவ்வாறு உரையாற்றினார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் முதன் முதலில் வந்தோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த சுமார் 122 உரிமங்களை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை,…
Read Moreதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.
subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…
Read Moreஇந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Australian Research center has warned drought risk in India இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த ஆண்டு எல்-நினோ என்று அழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தின் காரணமாக இந்தியாவில்பருவமழை குறைந்து, கடும் வறட்சி ஏற்படும் அபாயமுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியவின்வானிலை மாற்றங்களை பசிபிக் கடலின் மேற்பரப்பின்வெப்பம் தான் தீர்மானிக்கிறது. இவ்வெப்ப நிலை சீராக இருந்தால்தான், இந்தியாவின் வானிலை நன்றாகஇருக்கும். இல்லையென்றால் கடும் வறட்சி, அல்லது அதிக மழை பொழிவு உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பருவநிலை,மேற்கு பசிபிக் கடலோரபகுதியின்வெப்ப நிலைமற்றும் கடல் அழுத்தத்தையும்கணக்கிட்டு தான் கணிக்கப்படுகிறது. தள்ளிப்போகியுள்ள பருவமழை: இந்த ஆண்டு புவி வெப்பம் அதிகரித்துள்ளதால், எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு வழக்கத்திற்கு மாறாக வெப்பமாக உள்ளது. இந்தியாவில்,இந்த ஆண்டிற்க்கான…
Read Moreஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…
Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked காபுல், மே 23- ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். நவீன துப்பாக்கிகளை ஏந்திவந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இந்திய தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள். இந்த துப்பாக்கி தாக்குதலில் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், தூதரகத்தை சேர்ந்த பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். மேலும், தூதரகத்தினுள் நுழைய…
Read Moreலஞ்சம் வாங்கிய கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது
Revenue inspector of Kelambakkam was arrested by Directorate of Vigilance & Anti-Corruption sleuths சென்னை,மே.21 காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்போரூர் ஒன்றியத்தில் பட்டிபுலம் எனும் ஊரை அடுத்து உள்ள புது இடையூர் குப்பம் எனும் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் சுமார் 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு (NOC) தடையில்லா சான்றிதழ் எனும் அனுமதிசான்றிதல் புதுப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஆய்வு நடத்தி பள்ளிக்கு அனுமதிச்சான்று வழங்கக்கோரி பள்ளிக்கூட நிர்வாகி கண்ணன் திருப்போரூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்து இருந்தார். இதுசம்பந்தமாக பள்ளிக்கட்டிடங்களை ஆய்வுசெய்து அறிக்கை வழங்கும்படி கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தாசில்தார் ஆறுமுகம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆய்வு செய்த மணிவண்ணன், அனுமதி சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்துவந்தார். இதுகுறித்து பள்ளிக்கூட நிர்வாகி…
Read More