மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை) அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினருடைய பிரச்சாரத்திற்கு பயன்படும் கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டி மதுரையை சார்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read MoreTag: Madras high court Madurai bench
பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை ! சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை: சட்டவிரேதமாக ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி கடத்தலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்த டிராக்டர்களை உடனே விடுவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இராமநாதபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் டிராக்டர்களை பறிமுதல் செய்தார்கள். இந்த நிலையில், அந்த டிராக்டர் உரிமையாளர் திரு.எஸ்.முருகன் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிஅரசர் சுவாமிநாதன் விசாரணை செய்தார். அப்பொழுது முருகன் சார்பாக, இந்த டிராக்டகள் மணல் கடத்தலுக்காக பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைனையடுத்து திரு.எஸ்.முருகனுக்கு ரூபாய்…
Read Moreஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு
Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed for lawyers : Madras High Court ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதே நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் தேதி அவ்வழக்கறிஞர்களை கைதுசெய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. “மக்களே அதிகாரம்” வழக்கறிஞர்கள் ஹரி ராகவன் மற்றும் வஞ்சிநாதன் இருவரும் மதுரை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் “மக்களே அதிகாரம்” என்ற இயக்கத்தின் செயலாளர்களாகும். போலீசார் அவர்களுக்கு எதிராக பத்து வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி திரு ஜி.ஆர். ஸ்வாமிநாதன் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு…
Read More