செங்கல்பட்டு 27பிப்ரவரி 2019: கீழமை நீதித்துறைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக கூறி, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே போலி நேர்முக தேர்வு நடைபெற்ற சம்பவம் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. செங்கல்பட்டு, சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலகத்தினுள், தாலுகா அளவிலான சட்டப் பணிகள் குழுவிற்கு இளநிலை உதவியாளர்கள் வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, போலி நேர்முகத் தேர்வுவை நடத்தியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்கள். இந்த ஜாமின் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. நேர்முகத்தேர்விற்க்காக 23 நபர்களை அழைத்து வந்த திண்டுக்கல்லை சார்ந்த மணி என்பவரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிமன்ற வளாகத்தினுள்ளேயே போலி நேர்முக தேர்வு நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று நீதிபதி கூறினார். இவ்வழக்கில்…
Read MoreYou are here
- Home
- Police officials