Manmohan Singh criticised by chidambaram for 2G scam 2ஜி ஊழல் குற்றச்சாட்டு பூதாகரம் ஆகும் முன்பே அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை மன்மோஹன்சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றம் இந்த ஊழல் விவகாரத்தில் தலையிட்டு உரிமங்களை ரத்து செய்யும் வரை மன்மோகன் அரசு காத்திருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் இவ்வாறு உரையாற்றினார். 2ஜி ஊழல் குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் முதன் முதலில் வந்தோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த சுமார் 122 உரிமங்களை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2ஜி ஊழல் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை,…
Read MoreTag: Prime minister Manmohan singh
ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி ???. 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடக்கம்???
Former Central Minister G K Vasan Plans to starts a New political Party சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுக்காவிட்டால் “தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்” எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவ முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் வற்புறுத்தியும் தான் போட்டியிட முடியாது என கூறி மறுத்துவிட்டார். அதனால் காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்தது. அந்த அதிருப்தியை தணிக்கும் வகையில் கட்சிக்காக சூறாவளி சுற்று பயணம் செய்து கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும் அது எதுவும் பலன் தரவில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், இப்போது…
Read Moreஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்
Abnormal Corruption and Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது, ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் 50–க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எவருமே எதிர் பார்க்காத இந்த படு தோல்வி அந்த கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதுவும் காங்கிரசுக்கு சாதகமான இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் இந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் கூறியுள்ளார்கள். மேலும் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு , சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்கள். எனினும் அதை…
Read Moreராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற மகிழ்ச்சி: மன்மோகன் சிங்
Manmohan Singh is always ready to work under Rahul Gandhi leadership புதுடெல்லி: ராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மன்மோகன் சிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு சென்று நேற்று நாடு திரும்பினார். அவர் சிறப்பு விமானத்தில் அளித்த பேட்டி பின்வருமாறு :வரும் மக்களவை தேர்தலுக்கு பின், ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். இதற்கு நான் எப்போதுமே ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமையில் பனியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. அரசியலில் நிரந்தர பகைவர்களும் நண்பர்களும் இல்லை. ஒரு காலத்தில் மதிப்பு மிக்க உறுப்பினராக…
Read Moreசி.பி.ஐ-க்கு சுய அதிகாரம் தர அமைச்சரவை குழு ஆய்வு
Prime minister Manmohan singh appointed a committee for the independence of CBI and its functional autonomy உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு அரசியல் தலையீடு இல்லாத சுய அதிகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை குழு வை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் வி. நாராயண சாமி, பில் சிபல், மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுகிறார். முன்னதாக நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. Prime minister Manmohan singh appointed a committee for the…
Read More