Earthquake off Odisha sparks tremors, panic in Chennai வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் பல இடங்களில் பூமி அதிர்ந்தது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் வங்கக் கடலில் 10 கிமீ ஆழத்தில் புதன்கிழமை இரவு 9.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு, வட இந்தியா மற்றும் சென்னையில் சில இடங்களில் அதிர்வு உணரப்பட்டது. ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி…
Read MoreYou are here
- Home
- tremors